×

ஏசி, பேன் இல்லாம இருக்க முடியல; தமிழகத்தில் மின் தேவை புது உச்சத்தை எட்டியது

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறிகள், ஏசிக்கள் ஆப் செய்யப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி 451.79 மில்லியன் யூனிட் என்ற அளவில் மின்சார பயன்பாடு இருந்தது. அதேபோல ஏப்.26ம் தேதி 20,583 மெகாவாட் என்ற அளவில் மின் தேவை பதிவானது. ஆனால் தற்போது இந்த அளவுகளையும் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம்(ஏப்.30ம் தேதி) மின் பயன்பாடு 454.32 மில்லியன் யூனிட்டாகவும், மின் தேவை 20,701 மெகாவாட்டாகவும் பதிவானது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அதிகபட்ச மின் தேவை மற்றும் பயன்பாடு இருந்தாலும் சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்தது. தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சாரம் தடைபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மின்வாரிய பணியாளர்கள் செய்து வருகின்றனர். மின் வாரியத்திற்கு சொந்தமான உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் தவிர்த்து கூடுதலாக தனியாரிடம் இருந்து போதிய அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக மின் தடை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஏசி, பேன் இல்லாம இருக்க முடியல; தமிழகத்தில் மின் தேவை புது உச்சத்தை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...